மூதாட்டியின் வீட்டில் நகை திருட்டு

மூதாட்டியின் வீட்டில் நகை திருட்டு

Update: 2022-04-04 17:27 GMT
மூதாட்டியின் வீட்டில் நகை திருட்டு
இடிகரை

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி சுந்தரி (வயது 61). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாய்பாபா காலனியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். 

பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறந்து தங்க மோதிரம், சங்கலி உள்ளிட்ட மொத்தம் 3 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்