காதல் மனைவியை கொன்றது ஏன்?

காதல் மனைவியை கொன்றது ஏன்?;

Update:2022-04-04 22:50 IST
காதல் மனைவியை கொன்றது ஏன்?
போத்தனூர்

கோவை போத்தனூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரு டைய மகன் நாகார்ஜூனன் (வயது32). இவர் அதே பகுதியை சேர்ந்த சர்மிளாவை (27) கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

பின்னர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சுந்தராபுரம் காந்திநகரில் தனிக்குடித்த னம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சர்மிளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகார்ஜூனன், சர்மிளாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாகார்ஜூனனை  கைது செய்தனர்.

கைதான நாகார்ஜூன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

நாங்கள் 2 பேரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து 4 மாதங்க ளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு சர்மிளா வேறு ஒருவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கேட்ட போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சர்மிளாவை கத்தியால் குத்தி கொலை செய்தேன்.

மனைவியை கொன்றுவிட்டதால் நானும் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அந்த முடிவை மாற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களுடன் மது குடிக்க சென்றேன். அப்போது அவர்களிடம் மனைவியை கொன்று விட்டதாக கூறினேன். இதை அறிந்த போலீசார் என்னை மடக்கி பிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்