மினி லாரி மோதி முதியவர் சாவு

தியாகதுருகம் அருகே மினி லாரி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-04 17:13 GMT
கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே ஆண்டிமூப்பர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 67) விவசாயி, இவர் சொந்த வேலையாக வீட்டில் இருந்து சைக்கிளில் தியாகதுருகம் சென்றார். பின்னர் அங்கு வேலை முடிந்ததும் அதே சைக்கிளில் அவர் வீடு திரும்பினார். ஆண்டிமூப்பர் கொட்டாய் கிராமம் அருகே சென்றபோது, பின்னால் வந்த மினிலாரி ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சின்னசாமி மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மினி லாரி டிரைவரான  உளுந்தூர்பேட்டை அருகே கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் கொளஞ்சிமுத்து (27) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்