பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சீர்காழி
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். இதில், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஞானப்பிரகாசம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கடையூர் சன்னதி வீதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் கபிரியேல் மற்றும் மாதர் சங்கத்தினர், இந்திய வாலிபர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொள்ளிடம்
கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் நேதாஜி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக கொள்ளிடம் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரயில் நிலையம் செல்லும் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.