அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்

அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்;

Update:2022-04-04 22:41 IST
அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்
பேரூர்

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், நரசீபுரம், தேவராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து  பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு   அதிகளவில் பொதுமக்கள்சென்று வருகின்றனர்.

தொண்டாமுத்தூர் பகுதிகளில் மட்டும் 2 கல்லூரிகள்செயல்பட்டு வருவதால் கல்லூரி செயல்படும் நேரத்தின் அடிப்படையில் தினசரி காலை  7 மணி மற்றும் 9 மணிக்கு என 2 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 10 மணிக்கு மேல் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததால், நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாகவும், சில நேரங்களில் நடந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து போக்குவரத்து மண்டல மேலாளரிடம் பல முறை பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில்  ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை தொண்டாமுத்தூர் செலம்பனூர் பகுதிக்கு வந்த ஒரு அரசு பஸ்சை திடீரெனதடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து மற்றொரு பஸ்சையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து சென்று மறியிலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 பேச்சுவார்த்தையில் குறித்த நேரத்திற்கு, அரசு பஸ்களை  இயக்குவதாக உறுதியளிக்கப்பட்டதன் பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் பாதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்