சமையல்காரரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல்
சமையல்காரரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல்;
கோவை
கோவை கணபதியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 34). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை செய்கிறார். இவர் ஓரினசேர்க்கை தொடர்பான செல்போன் செயலியில் தனது விபரங்களை பதிவு செய்து உள்ளார். இதனை தெரிந்த கொண்ட வாலிபர் சிலர் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசினர். இதனை தொடர்ந்து அவர்கள் சாய்பாபா காலனி அருகே உள்ள தண்டவாள பகுதிக்கு சமையல்காரர் கங்காதரனை அழைத்துள்ளனர்.
இதனையடுத்து சமையல்காரர் அந்த வாலிபர்கள் அழைத்த இடத்திற்கு இரவில் புறப்பட்டு சென்றார். அங்கு 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கங்காதரனை கண்டதும் கத்தியை காட்டி, அவரை நிர்வாணமாக நிற்க வைத்து, தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.6ஆயிரம் பணம் வேண்டும் என்று கூறி மிரட்டினர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து, அவரது செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.
விசாரணையில் அவரை மிரட்டியவர்கள் கல்லூரி மாணவர்களான பிரசாத் (வயது 19), நிஷாந்த் (22), மாணிக்கம் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரசாத், நிஷாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.