வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-04 17:03 GMT
வேலூர்

வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 21). இவர்  பெரியார் பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த மர்மநபர் திடீரெனக் கத்தியை காட்டி மிரட்டி, மோகன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.2,200-யை பறித்து விட்டு தப்பியோடினார். அதிர்ச்சி அடைந்த மோகன் திருடன்.. திருடன்.. எனக் கூச்சலிட்டார். அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் திருடனை மடக்கி பிடித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பணம் பறித்தவர் வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சதீஷ்குமார் மீது சத்துவாச்சாரி, காட்பாடி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்