முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

Update: 2022-04-04 16:58 GMT
முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
கோவை

கோவையை அடுத்த பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 9 வயது மற்றும் 11 வயதுடைய 2 சிறுமிகள் என 3 சிறுமிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த கோவை சுண்டபாளையத்தை சேர்ந்த பெருமாள்சாமி (வயது 72) என்பவர் 3 சிறுமிகளையும் அழைத்து சென்று தனி இடத்தில் வைத்து பாலியர் தொல்லை கொடுத்து உள்ளார்.


அத்துடன் இதை வெளியே சொன்னால் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுமிகள் இந்த சம்பவத்தை வெளியே சொல்லவில்லை. இதற்கிடையே சம்பவம் நடந்த 10 நாட்கள் கழித்து அந்த சிறுமிகள் படித்த அரசு பள்ளியில் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் அந்த சிறுமிகள் தங்களை முதியவர் பெருமாள்சாமி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் பெருமாள்சாமி மீது போக்சோ மற்றும் மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக பெருமாள்சாமி நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 

வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், 3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்காக போக்சோ வழக்கில் தலா 5 ஆண்டு என மொத்தம் 15 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் மிரட்டல் வழக்கில் தலா ஒரு ஆண்டு என மொத்தம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். 

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்