நண்பரை அரிவாளால் வெட்டியவருக்கு வலைவீச்சு

நண்பரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-04-04 16:53 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள அம்மன்கோவில் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் முரளி (வயது30). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கார்மேகம் (26) என்பவரும் நண்பர்களாவர். இவர்கள் இருவரும் ராமநாத புரம் வந்து நண்பர் நாகேந்திரனுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். இதன்பின்னர் இவர்கள் அருகில் உள்ள பச்சை குத்தும் இடத்திற்கு சென்று பச்சை குத்தி உள்ளனர். அப்போது முரளிக்கு அவரின் நண்பர் நாகேந்திரன் என்பவர் பணம் கொடுத்துள்ளார். இதனை கண்ட கார்மேகம் எனக்கும் சேர்த்து பணம் கொடுக்க மாட்டாயா என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு திரும்பி சென்றுள்ளனர். இதனை மனதில் வைத்து கொண்டு கார்மேகம் முரளியை அழைத்து மீண்டும் தகராறு செய்து அரிவாளால் வெட்டினாராம். இதில் படுகாயம் அடைந்த முரளி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்மேகத்தை தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே கேணிக்கரை காவல் நிலையத்தில் கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்