75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா
கள்ளக்குறிச்சியில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-வது சுதந்திர திரு நாள் அமுதப் பெருவிழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மணிக்கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த கண்காட்சியை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் உருவபடங்கள் பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக்ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) இந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் தீபிகா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஹெர்லி ஏஞ்சலா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பணி திட்ட அலுவலர் செல்வி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.