மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-04-04 16:51 GMT
மயிலாடுதுறை
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்