விரிஞ்சிபுரத்தில் 22 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

விரிஞ்சிபுரத்தில் 22 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-04 16:27 GMT
வேலூர்

விரிஞ்சிபுரம் பகுதியில் மர்மநபர்கள் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அண்டை மாநிலங்களுக்கு கடத்தி வருவதாக வேலூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கும், மாவட்ட திட்டமிட்ட குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பின்புறம் லாரி ஒன்று வெகுநேரம் நிற்பதாகவும், அதில் மூட்டைகள் பல உள்ளதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சென்று லாரியை சோதனை செய்தபோது அதில் 220 மூட்டைகளில் 22 டன் ரேஷன் அரிசி இருந்தது.

 விசாரணையில், மர்மநபர்கள் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக அங்கு நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார்? லாரியின் உரிமையாளர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்