‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-04 16:17 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்மோட்டார் பழுது சரிசெய்யப்படுமா?
பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டி ஏ.டி.காலனியில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த மின்மோட்டார் பழுதாகி விட்டது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மின்மோட்டாரை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-பரமேஸ்வரன், எரமநாயக்கன்பட்டி.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
போடி 16-வது வார்டில் உள்ள ஒருசில தெருக்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-வெங்கட், போடி.
சேதமடைந்த சாலை
வடமதுரையை அடுத்த அய்யலூரில் இருந்து வடுகப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. கற்கள் பெயர்ந்து சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகிவிட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, வடமதுரை.
வீணாக செல்லும் குடிநீர்
திண்டுக்கல்-நத்தம் சாலையில் குள்ளனம்பட்டி அருகே குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, தினமும் குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையில் பெரிய பள்ளம் உருவாகிவிட்டது. மேலும் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் குடிநீர் தேங்கி நிற்கிறது. எனவே குழாய் கசிவை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-ராஜேஷ்வரி, திண்டுக்கல்.
தெருக்களில் கட்டிட கழிவுகள்

திண்டுக்கல் நாகல்நகரில் சில தெருக்களில் கட்டிட கழிவுகள் கொட்டி குவித்து வைக்கப்படுகின்றன. அதில் சிலர் குப்பைகளை கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனலட்சுமி, திண்டுக்கல்.

மேலும் செய்திகள்