போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின் பேரில் நேற்று மப்பேடு போலீஸ் நிலையத்தின் சார்பில் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-04-04 15:41 GMT
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மப்பேடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் டி.எஸ்.பி சந்திரதாசன் கலந்து கொண்டு போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பின்னர் அவரும் பேரணியில் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றார். 

இப்பேரணி பேரம்பாக்கம் புதிய மேம்பாலத்தில் இருந்து தொடங்கி பஜார் வீதி, பஸ் நிலையம் வழியாக வந்து பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து முடிக்கப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

மேலும் செய்திகள்