சாலையோரம் கவிழ்ந்த காற்றாலை இறக்கை, லாரி மீட்பு
திண்டுக்கல் அருகே சாலையோரம் கவிழ்ந்த காற்றாலை இறக்கை மற்றும் லாரி மீட்கப்பட்டது.;
சின்னாளப்பட்டி:
சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று முன்தினம் 270 அடி நீள ராட்சத காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு 3 லாரிகள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன. திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் நான்கு வழிச்சாலையில் 3 லாரிகளும் வந்தன. அப்போது முதல் 2 லாரிகள் அங்குள்ள வளைவில் திரும்பி சென்றன. 3-வதாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியுடன், காற்றாலை இறக்கையும் கவிழ்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை போலீசார் விசாரணை நடத்தியதுடன், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பின்னர் சாலையோரம் கவிழ்ந்த லாரி மற்றும் ராட்சத காற்றாலை இறக்கைகளை மீட்கும் பணி நடைபெற்றது. இதற்காக மதுரையில் இருந்து ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. அப்போது மேலும் ஒரு ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. அதன்படி, 2 கிரேன் எந்திரங்கள் மூலம் லாரி மற்றும் காற்றாலை இறக்கை மீட்கப்பட்டது. பின்னர் அந்த இறக்கை, மற்றொரு லாரியில் ஏற்றப்பட்டு தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் லாரி பழுது பார்ப்பதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டது.