குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை அதிகாரி ஆய்வு
குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை அதிகாரி ஆய்வு
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், குளிர்பானங்களை சுற்றுலா பயணிகள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் தானியங்கி குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால், பல இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன.
இதை அறிந்த கலெக்டர் அம்ரித், குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி அவை பழுது நீக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 குடிநீர் ஏ.டி.எம். எந்திரகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவை உரிய முறையில் இயங்குகிறதா? என்று சோதித்து பார்த்தார். ஆய்வின்போது கோத்தகிரி செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.