ஊட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஊட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2022-04-04 14:19 GMT
ஊட்டி

ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் நகராட்சி வாகன நிறுத்துமிடம் உள்ளது. படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக இந்த இடம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகன நிறுத்துமிடத்தை குத்தகைக்கு எடுத்த ஒருவர் கடைகள் அமைத்து இருந்தார். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகை, கடை வாடகை செலுத்தவில்லை. இதனால் நகராட்சிக்கு ரூ.8 லட்சம் குத்தகை பாக்கி இருந்தது. 

இந்தநிலையில் இன்று ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் இளங்கோவன் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் கடந்த 6 ஆண்டுகளாக வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கடைகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் காவலாளி தங்கும் அறை, வாட்டர் சர்வீஸ், இரும்பு குடோன், வாகனங்கள் பழுது பார்க்கும் கடை என 4 கடைகள் அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்