பள்ளி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-04 13:40 GMT
கீழ்பென்னாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கார்ணாம்பூண்டி வசூரை சேர்ந்தவர் சிவா (வயது 24), லாரி டிரைவர். இவரும், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தனர். 

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், சிவா, மாணவியை கடத்தி சென்று கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்திருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் ஷிமோகாவில் உள்ள மாணவி இருக்கும் வீட்டிற்கு சென்று சிவாவை பிடித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிவாவை கைது செய்தனர். பின்னர் அவரை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்