திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிலரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாகசக் கலை மன்றமும், வாழ்கை நெறிக்கல்வி மன்றமும் இணைந்து, இன்றைய சவால்களும் உடற்கல்வியும் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடத்தியது.

Update: 2022-04-04 13:03 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாகசக் கலை மன்றமும், வாழ்கை நெறிக்கல்வி மன்றமும் இணைந்து, “இன்றைய சவால்களும் உடற்கல்வியும்” என்ற தலைப்பில் பயிலரங்கம் நடத்தியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். சாகசக்கலை மன்ற இயக்குனர் சிவஇளங்கோ வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் காசிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், “தவறான பழக்க வழக்கங்களால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றியும், உடற்பயிற்சியின் மூலம் இன்றைய சவால்களை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்” என்றும் விளக்கி கூறினார். வாழ்க்கை நெறிக்கல்வி மன்றத்தின் இயக்குனர் ராேஜஷ், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவர் சுடலைமுத்து நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ரமேஷ், மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், முருகேஸ்வரி, திலீப்புமார், செல்வன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்