பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-04-04 19:00 GMT
வலங்கைமான்:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

வலங்கைமான் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழுவை சேர்ந்த கலியபெருமாள், ஒன்றிய நிர்வாகிகள் இளங்கோவன், முரளி, பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் ஒன்றிய பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

நீடாமங்கலம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி தலைமை தாங்கினார்.
 கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சுமதி, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூசாந்திரம், தமிழ்மணி, காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் கலந்து கொண்டு . பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

திருத்துறைப்பூண்டி

 திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில்  பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்கக்கோரி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கே.கோபு, ஒன்றிய செயலாளர் காரல்மர்க்ஸ் முன்னிலை வகித்தார். இதில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

கோட்டூர்

கோட்டூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்  சண்முகவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம், ஒன்றிய நிர்வாகிகள் தங்கராசு, அறிவுச்செல்வம், கோவிந்தராசு, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்