வலங்கைமானில் மதுவிற்றவர் கைது

வலங்கைமானில் மதுவிற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-04 18:45 GMT
வலங்கைமான்:-

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழாவையொட்டி அந்த பகுதியில் குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் அந்த பகுதியில் மது பாட்டில்கள் விற்கப்படுவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது நன்னிலம் அருகே உள்ள வெள்ள மண்டபம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் (வயது59) என்பவர் வெளிமாநில மது பாட்டில்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்