கண்ணகி கோவிலுக்கு நடைபயணம் செல்ல முயன்ற சிவசேனா கட்சியினர் 42 பேர் கைது

கண்ணகி கோவிலுக்கு நடைபயணம் செல்ல முயன்ற சிவசேனா கட்சியினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-04 11:38 GMT

தேனி:
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக பாதை அமைக்க வேண்டும், இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசேனா கட்சியினர் பழனிசெட்டிபட்டியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு நடைபயணமாக செல்ல திட்டமிட்டனர். 
இதையடுத்து அவர்கள் நடைபயணத்தை பழனிசெட்டிபட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்க முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார், நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தனர். ஆனால் சிவசேனா கட்சியினர் தடையை மீறி நடைபயணம் செல்ல முயன்றனர். இதனால், மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்