கம்பம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு பயிற்சி

கம்பம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு பயிற்சி நடந்தது.

Update: 2022-04-04 11:14 GMT
கம்பம்:
கம்பம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் கம்பம் அரசு மருத்துவமனையில், தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நோயாளிகளை பத்திரமாக மீட்பது, தீயை அணைப்பது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் பொன்னரசன், டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்