விற்பனைக்காக மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது
விற்பனைக்காக மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹெல்த் காலனி பகுதியில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார். உடனே அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், இந்திராநகரை சேர்ந்த தணிகாசலத்தின் மகன் சக்திவேல் என்பது தெரியவந்தது. இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.