மது விற்ற பார் மேலாளர் உள்பட 2 பேர் கைது

மது விற்ற பார் மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-03 22:19 GMT
சமயபுரம்:
சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் நேற்று சமயபுரம் நால்ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்ற பார் மேலாளர் மதியழகன் (வயது 40) மற்றும் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள பழையூைரை சேர்ந்த சண்முகராஜா (41) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 33 குவார்ட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்