மத கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் கைது
மத கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் கைது
நாகர்கோவில்,
“கன்னியாகுமரி நாகர்கோவில்” என்ற பெயரில் உள்ள முகநூல் (பேஸ்புக்) கணக்கில், மத கலவரம் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை தூண்டும் விதமாக கருத்துகள் பதிவிடப்பட்டு இருந்தது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டது பறக்கை புல்லுவிளையை சேர்ந்த கண்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் முகநூலில் இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் நீக்கினர்.