தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிந்துபட்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்,
சிந்துபட்டி அருகே உள்ள கட்டதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் நீதிமுத்து (வயது 19). இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். வீட்டில் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் விரக்தி அடைந்த நீதிமுத்து பாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த சிந்துபட்டி போலீசாா் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.