மாவட்ட ஆக்கி போட்டி

சேலத்தில் மாவட்ட ஆக்கி போட்டி நடந்தது.

Update: 2022-04-03 20:52 GMT
சேலம்:-
சேலம் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த புல்ஸ் ஆக்கி கிளப், மாருதி ஆக்கி கிளப், வாரியர்ஸ் கிளப், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி அணி, விநாயகாமிஷன் பல்கலைக்கழக அணி உள்பட 9 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் வாரியர்ஸ் அணியும், விநாயகாமிஷன் பல்கலைக்கழக அணியும் மோதின. இதில் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் வாரியர்ஸ் ஆக்கி கிளப் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. விநாயகா மிஷன் பல்கலைக்கழக ஆக்கி அணி 2-வது இடத்தையும், மாருதி ஆக்கி கிளப் அணி 3-வது இடத்தையும் பிடித்தது. இதையடுத்து வெற்றி பெற்ற ஆக்கி அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புல்ஸ் ஆக்கி கிளப் அகாடமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்