பெரிய சூரக்குண்டு கோவில் கும்பாபிஷேகம்

மேலூர் அருகே பெரிய சூரக்குண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;

Update: 2022-04-03 20:37 GMT
மேலூர்,

மேலூர் அருகே உள்ள பெரியசூரக்குண்டு கிராமத்தில் உள்ள சின்ன காஞ்சான் வகையறா பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கொட்டாக்கருப்பு சுவாமி, தொட்டிச்சி அம்மன், வீரணன் சுவாமி ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் 15 நாட்கள் காப்பு கட்டி கடுமையான விரதம் இருந்து வந்தனர். யாகசாலையில் கணபதி பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், 3-ம் கால மகா பூர்ணாகுதி பூஜைகளுடன் நடைபெற்றது. கிடாரிப்பட்டி ரவி சாஸ்திரி கும்பத்தில் புனிதநீரை ஊற்றினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்