மூதாட்டி மர்ம சாவு
சிவகாசி அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சிவகாசி,
சிவகாசி அம்மன்கோவில்பட்டி தென்பாகத்தை சேர்ந்த தியாகராஜன் மனைவி சண்முகத்தாய் (வயது 80). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகில் தீக்காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சண்முகத்தாய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் உறவினர் பஞ்சாட்சரம் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மூதாட்டி மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.