அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
மதுரையில் டியூசன் படிக்க வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரையில் டியூசன் படிக்க வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரசு பள்ளி ஆசிரியை
மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண், மதுரை- சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது மகனுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில், தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த வீரமணிக்கும், அந்த ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி கள்ளத்தொடர்பாக மாறியது. கணவரும் பிரிந்து சென்று விட்டதால், வீரமணியுடனான தொடர்பை ஆசிரியை அதிகரித்தார்.
டியூசன் எடுத்தார்
இதற்கிடையே, ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் அந்த ஆசிரியைக்கும், அதில் வரும் காட்சிகள் போன்று செய்ய ஆசை வந்தது. அதன் காரணமாக, டியூசன் படிக்க தன்னிடம் வந்த மாணவர்களுடன் அவர் உல்லாசம் அனுபவித்தார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக வீடியோ பரப்பிய கள்ளக்காதலன் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாக்குமூலம்
இந்தநிலையில், அவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
2010-ம் ஆண்டு சென்னை செல்லும்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின்னர் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்தனர். அந்த நிலையில் தான், டியூசன் படிக்க வந்த மாணவர்களை அவர்களது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது. இதில் மேலும் சில சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்த விசாரணையும் நடக்கிறது.
மேலும், சமூக வலைதளபக்கத்தில் "வாங்க பழகலாம்" என்ற தலைப்பில் ஒரு பக்கத்தை நடத்தி வந்துள்ளனர்.
அதன் மூலம், அந்த வலைதள பக்கத்தில் இணையும் நபர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.
அது பற்றிய விசாரணையும் நடக்கிறது. விசாரணையின் முடிவில் தான் இந்த சம்பவத்தில் யார், யாரிடம் இவர்கள் பணம் பறித்தனர், யார் யாருக்கு தொடர்பிருக்கிறது என்பது தெரியவரும். தற்போது அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் மடிக்கணினி, கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் குறித்த விசாரணையும் நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பணியிைட நீ்க்கம்
இது ஒருபுறம் இருக்க, டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவர்களுடன் உல்லாசம் அனுபவித்த அரசு பள்ளி ஆசிரியையை, பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.