அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள வெம்பூரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 52). இவருடைய மனைவி பெருமாள் அக்காள் (48). இந்நிலையில் நாகராஜன் சொந்த வேலையாக தனது மனைவி மற்றும் மகள் சண்முகப்பிரியா உடன் காரில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் ஒரு கல்லூரி அருகே சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக நாகராஜன் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நாகராஜன் மற்றும் அவருடைய மனைவி பெருமாள் அக்காள் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெருமாள் அக்காள் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.