வயலில் இறங்கி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

வாசுதேவநல்லூரில் வயலில் இறங்கி விவசாயிகள் நேற்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-03 19:37 GMT
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூரில் வயலில் இறங்கி விவசாயிகள் நேற்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் எதிர்ப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தற்போது சிவகிரி, கடையநல்லூர் தாலுகா பகுதிகளில் நான்குவழிச் சாலை பணிகளுக்கு சர்வே செய்யப்பட்டு சாலை அமைய இருக்கும் இடங்களில் சர்வே கற்கள் நடப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டம்

இந்த நிலையில் நான்கு வழிச்சாலை பணிகளை மாற்றி அமைக்க வலியுறுத்தி வாசுதேவநல்லூர் சிந்தாமணி பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று தங்களது வயலில் நிலங்களில் திரண்டு நின்று கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இதேபோல் விஸ்வநாதப்பேரி, டி.என்.புதுக்குடி, அய்யாபுரம் உள்பட 7 இடங்களில் விவசாயிகள் தங்களது இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். 
இந்த போராட்டத்தால் அந்தந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்