பராசக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2022-04-03 19:37 GMT
விருதுநகர், 
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் வளாகம் அருகே பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செலுத்தினர். மேலும் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனர். வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவைெயாட்டி மாரியம்மனும், வெயிலுகந்தம்மனும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மேலும் செய்திகள்