நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்
ஆலங்குளம் அருகே நகை கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.;
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள எதிர்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஊராட்சி தலைவர் புஷ்பவள்ளி, சுப்புராஜ் கூட்டுறவு சங்க செயலாளர்கள் சாந்தி, நர்மதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.