பணகுடி:
பணகுடியை அடுத்த செம்புலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 62) கூலி தொழிலாளி. இவர் குடிபோதையில் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
இதனால் வீட்டில் உள்ளவர் அவரை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.