ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி
கங்கைகொண்டானில் ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.
நெல்லை:
நெல்லை சங்கர்நகர் ரெயில்வே பீடர் ரோட்டில் ஒரு வீடு எடுத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பிரீத்தா (வயது 55) என்பவர் உள்பட 8 பேர் வசித்து வந்தனர். இவர்கள் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள்.
இந்த நிலையில் நேற்று ராம்பிரீத்தா உள்பட 8 பேர் ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை பாண்டியன் (50) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ராம்பிரீத்தா, ஆட்டோ டிரைவர் பாண்டியன் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை உடனே பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்பிரீத்தா பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.