ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் தொடக்கத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அதை பாடை மீது ஏற்றி 4 பேர் தூக்கிப்பிடித்தவாறும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தவரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.