பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
பாளையங்கோட்டை அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 25). பால் வியாபாரியான இவர் நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் பால் கொண்டு வந்தார். மேலப்பாட்டம்-பாளையங்கோட்டை சாலையில் அவர் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராமகிருஷ்ணனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.