சிவகங்கையில் நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு வந்து செல்ல மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு போக்குவரத்து வசதி
சிவகங்கையில் நடைபெறும் புத்தக திருவிழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்க சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கையில் நடைபெறும் புத்தக திருவிழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்க சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தக திருவிழா வருகிற 11-ந்்தேதி தொடங்கி 15 நாட்கள் நடக்கிறது. இந்த புத்தக திருவிழா தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. முதன்மைகல்வி அலுவலர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீரராகவன், வளர்ச்சிப் பிரிவு மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி (சிவகங்கை), சண்முகநாதன் (தேவகோட்டை),பங்கஜம் (திருப்பத்தூர்), முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சம்பத்குமார், அருளானந்தம் மற்றும் மாவட்டத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-மாணவ-மாணவிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிவகங்கையில் 11 நாள் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் நூறு ஸ்டால்களில் புத்தகங்கள் வைக்கப்படும். இந்த கண்காட்சியில் பொது அறிவு, இலக்கியம் உள்பட மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும் வைக்கப்படும். பள்ளி முதல்வர்கள் அந்தந்த பள்ளி மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்து வரலாம்.மேலும் இந்த கண்காட்சிகள் தினசரி நடைபெறும்.வாசிப்பு நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவ-மாணவிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். புத்தக வாசிப்பை மாணவ-மாணவிகள் நேசிக்க வேண்டும். மேலும், இதில் நடைபெறுகிற பல்வேறு போட்டிகளின் மூலம் வெற்றி பெறும் மாணவ, மாணவி களுக்கும் அவர்கள் விரும்பும் புத்தகமே பரிசாக வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
பாரம்பரியம்
அனைத்து பகுதிகளில் இருந்தும் எளிதில் வந்து செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பாரம்பரிய உணவு வகைகளை கொண்ட உணவு அரங்குகளும் அமைக் கப்பட்டு உள்ளது. நாள்தோறும் பல்வேறு வகையான திறன்வளர் போட்டிகளும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.