தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-03 18:42 GMT
தர்மபுரி:
தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபெருமாள், அருள், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் தர்மபுரி, புலிக்கரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் புலிக்கரை பகுதியில் நடத்திய சோதனையில் பாலக்கோடு அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் 16 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசியை பெங்களூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்