மருவத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
மருவத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தப்படுகிறது.;
பெரம்பலூர்,
பேரளி துணை மின்நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிகாடு, வாலிகண்டபுரம், க.எறையூர். நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.