10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

மீனுக்கு விரித்த வலையில் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது.

Update: 2022-04-03 18:36 GMT
தாமரைக்குளம், 
அரியலூர் அருகே பாலம்பாடி கிராமத்தில் உள்ள வஞ்சத்தான் ஓடையில் கிராம மக்கள் மீன் பிடிப்பதற்காக வலையை விரித்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வலைக்குள் சிக்கி கொண்டிருந்தது. இதையடுத்து, அவர்கள் அரியலூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அரியலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த மலைப்பாம்பு பேரளி காட்டில் விடப்படும் என வனவர் சக்திவேல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்