ராயக்கோட்டை அருகே கஞ்சா பயிரிட்ட தந்தை மகன் கைது
ராயக்கோட்டை அருகே கஞ்சா பயிரிட்ட தந்தை மகன் கைது செய்யப்பட்டனர்.;
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). இவரது மகன் மணி (வயது 28). விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளனர். இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் பாகற்காய் தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தந்தை, மகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகளை அழித்தனர்.