சூளகிரி அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

சூளகிரி அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2022-04-03 18:36 GMT
சூளகிரி:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் வினுச்தனுங்கா (வயது 39). இவர் சூளகிரி அருகே சப்படியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 2-ந் தேதி இவர் சப்படி-உத்தனப்பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் வினுச்தனுங்கா படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்