வாலாஜா அருகே ஏரிக்கரையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
வாலாஜா அருகே ஏரிக்கரையில் இருந்துதவறி விழுந்து தொழிலாளி பலியானார்.;
வாலாஜா
வாலாஜாபேட்டை கரிக்கல் சுடுகாடு அருகில் வசித்து வந்தவர் செல்வம் (வயது 50). சாலைகளில் பழைய பேப்பர்களை சேகரித்து வந்தார். இவர் வாலாஜாவை அடுத்த ஒழுகூர் ஏரிக்கரையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கால்தவறி கரையில் இருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் வாலாஜா போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.