மாதாந்திர பராமரிப்பு பணிகள்: சிப்காட் நகர், பல்கலைக்கழகம், நீர்பழனி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சிப்காட் நகர், பல்கலைக்கழகம், நீர்பழனி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-04-03 18:33 GMT
புதுக்கோட்டை:
நாளை மின்சாரம் நிறுத்தம்
புதுக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும்,  சிப்காட் நகர், மருதுபாண்டி நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூதுமில், சிட்கோ தொழில்பேட்டை (ரங்கம்மாள சத்திரம்), கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, வடசேரிபட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடையப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலகாயாம்பட்டி, வேப்பங்குடி, பல்லத்திவயல், பாலன்நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரிநகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், மச்சுவாடி, ஜீவா நகர் மற்றும் சிட்கோ தொழிற்போட்டை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
கீரனூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குளத்தூர் தாலுகா, தொண்டைமான் நல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தொண்டைமான் நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்னதிரையான்பட்டி, சிட்கோ தொழிற்பேட்டை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்