‘செல்பி’ எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்து புதுமண தம்பதி, நண்பர் பலி

பீட் மாவட்டத்தில் செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்து புதுமண தம்பதி, நண்பர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Update: 2022-04-03 18:10 GMT
கோப்பு படம்
மும்பை, 
பீட் மாவட்டத்தில் செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்து புதுமண தம்பதி, நண்பர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆற்றில் விழுந்தனர்
பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்திக் பதான் சேக்(வயது22). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தான் தாகா சேக் (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. புதுமண தம்பதி, நண்பர் சாகாப்புடன் காவத் கிராமத்தில் உள்ள ஆற்றுக்கு சென்றனர். இதில் அவர்கள் ஆற்றின் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக புதுமண தம்பதி ஆற்றில் விழுந்தனர். 
அவர்களை காப்பாற்ற நண்பர் சாகாப்பும் ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
உடல்கள் மீட்பு
தகவல் அறிந்து சென்ற போலீசார் நேற்று  3 பேரின் உடல்களையும் ஆற்றில் இருந்து மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வாத்வானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
செல்பி எடுக்க முயன்ற போது புதுமண தம்பதி, நண்பர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்