பெட்ரோல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-03 18:08 GMT
புதுக்கோட்டை:
பெட்ரோல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று நூதன போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்துவது போல, இறந்தவர்களை அடக்கம் செய்ய கொண்டு வரப்படும் வாகனத்தில் வைத்து, மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டரை பாடை கட்டி, மாலை அணிவித்து, வாகனத்தில் மாலைகளால் அலங்கரித்தும் ஊர்வலமாக கணேஷ்நகர் போலீஸ் நிலையம் அருகே இருந்து போஸ்நகரில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சுடுகாட்டில் வைத்து மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டரை இறக்கி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்