நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு 13-ந் தேதி முற்றுகை போராட்டம்
ஆக்கூரில், நான்குவழிச்சாலை பணிக்கு நிலம் ெகாடுத்த உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
திருக்கடையூர்:
ஆக்கூரில், நான்குவழிச்சாலை பணிக்கு நிலம் காடுத்த உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் சிம்சன், செயலாளர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் மாக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், தங்களது நிலத்தை கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்கக் கேட்டு வருகிற 13-ந் தேதி(புதன்கிழமை) பல்வேறு பகுதிகளில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில், கூட்டமைப்பு நிர்வாகி ஸ்ரீதர் நன்றி கூறினார்.